என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » போதை பொருள் கடத்தல்
நீங்கள் தேடியது "போதை பொருள் கடத்தல்"
உயிரைப் பணயம் வைத்து 246 கோகைன் போதைப்பொருள் பாக்கெட்டுகளை குடலுக்குள் மறைத்து கடத்தி வந்தவர், விமானத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மெக்சிகோ:
கொலம்பிய தலைநகர் பொகோடாவில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 199 பயணிகள் பயணம் செய்தனர்.
விமானம் மெக்சிகோ நாட்டின் சொனேரா மாகாணத்தின் மீது பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணம் செய்த ஜப்பானைச் சேர்ந்த 42 வயது பயணி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அவரது வயிறு மற்றும் குடல் பகுதியில் 246 கோகைன் போதைப் பொருள் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. ஜப்பானுக்கு கடத்துவதற்காக அளவுக்கு அதிகமாக கோகைன் பாக்கெட்டுகளை விழுங்கியிருக்கிறார். அவற்றில் சில பாக்கெட்டுகள் பிரிந்து, ரத்தத்தில் போதைப்பொருள் கலந்ததால் அவர் உயிரிழந்திருப்பதும் பரிசோதனையில் தெரியவந்தது.
மனிதர்களின் உடலுக்குள் போதைப் பொருளை மறைத்து கடத்தும் தந்திரத்தை, போதை மருந்து கடத்தல் கும்பல் பரவலாக கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கொலம்பிய தலைநகர் பொகோடாவில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 199 பயணிகள் பயணம் செய்தனர்.
விமானம் மெக்சிகோ நாட்டின் சொனேரா மாகாணத்தின் மீது பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணம் செய்த ஜப்பானைச் சேர்ந்த 42 வயது பயணி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
உடனே விமானத்தை ஹெர்மோசில்லோ விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கினர். உடனே அங்கு தயாராக இருந்த டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மனிதர்களின் உடலுக்குள் போதைப் பொருளை மறைத்து கடத்தும் தந்திரத்தை, போதை மருந்து கடத்தல் கும்பல் பரவலாக கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கொச்சியில் இருந்து மலேசியாவுக்கு விமானத்தில் துணி பார்சலில் ரூ.200 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்த முயன்ற சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் பிரசாந்தகுமார் (வயது 32). இவர் சென்னையில் வசித்து வருகிறார். சென்னையில் இருந்து தனியார் கூரியர் சர்வீஸ் மூலம் கொச்சிக்கு துணி பண்டல்களை பார்சல் செய்தார்.
கொச்சிக்கு பார்சல் சென்றதும் அங்கு வந்து பார்சல்களை பெற்றுக்கொண்ட பிரசாந்தகுமார் அவைகளை மலேசியாவுக்கு அனுப்ப வேறொரு பார்சல் கூரியரை அணுகினார்.
அப்போது பார்சல் ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சென்னையில் இருந்து நேரடியாக மலேசியாவுக்கு பார்சல்களை அனுப்பலாமே? ஏன் சென்னையில் இருந்து இங்கு கொண்டு வந்து, இங்கிருந்து மலேசியாவுக்கு பார்சல்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டார். அதற்கு பிரசாந்தகுமார் முறையாக பதில் கூறவில்லை.
இதனையடுத்து கூரியர் ஊழியர் எர்ணாகுளம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குறிப்பிட்ட பார்சல்களை பிரித்து பார்த்தபோது ரூ.200 கோடி மதிப்புள்ள 32 கிலோ மெத்தடின் என்ற போதை பொருள் இருந்தது. இதனையடுத்து பிரசாந்தகுமார் தலைமறைவனார். அவரை கேரள போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் வைத்து பிரசாந்தகுமாரை கேரள போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

×

X